ஜூங்கா: விஜய்சேதுபதியின் வித்தியாசமான லுக்

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

இந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி தற்போது 'ஜூங்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்சேதுபதியே தயாரிக்கும் இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்.

முதல்முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'வனமகள்' சாயிஷா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் விஜய்சேதுபதி லுக் தற்போது வெளிவந்துள்ளது. இதுவரை பெரும்பாலான படங்களில் விஜய்சேதுபதியை கிராமத்தானாகவே பார்த்து பழக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த வித்தியாசமான லுக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வியாபாரமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.