'நானும் ரெளடிதான்' படத்தின் பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'நானும் ரெளடிதான்' திரைப்படம், விஜய்யின் 'புலி' படத்துடன் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் ஒருசில வரிகளை இசையமைப்பாளர் அனிருத் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரெளடி என்றால் கத்தி, ரத்தம், வன்முறை என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த பாடலின் வரிகளை பார்க்கும்போது, இந்த ரெளடி ஒரு வித்தியாசமான காதல் ரெளடியாக இருப்பார் என நினைக்க தோன்றுகிறது.
அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பாடல் இதுதான்:
காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
வலியில்லாமல் வாழும் வாழ்க்கை தேவையில்லை
எனை மாற்றும் காதலே
காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனது யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கை தேவை இல்லை
தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னை தூக்குவேனே
கத்தியில்லா ரத்தமிலா ரெளடிதான்
காதலிக்க நேரம் உள்ள ரெளடிதான்
வெட்டுக்குத்து வேணாம் சொல்லும் ரெளடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரெளடிதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com