கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய விஜய்சேதுபதி படக்குழு

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவின்போது பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றான 'ராம்நாட் ரினோஸ்' என்ற அணியை 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' படக்குழுவினர் வாங்கியுள்ளனர். இந்த அணியின் கேப்டனும் விஜய்சேதுபதிதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. விஜய்சேதுபதியின் படத்தை புரமோஷன் செய்ய விஜய் சேதுபதி விளையாடும் கிரிக்கெட் அணியையே வாங்கியுள்ளது வித்தியாசமான புரமோஷனாக கருதப்படுகிறது.

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கலியுக வரதன் வந்துவிட்டார், கல்கி அவதாரம் வந்துவிட்டது: கமல் குறிப்பிடுவது யாரை?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக தற்காலிகமாக டுவிட்டர் அரசியலுக்கு இடைவெளி கொடுத்துள்ளார்.

கணவர் படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சைந்தவி

ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவியும் கர்நாடக சங்கீத பாடகியுமான "சைந்தவி" இன்று தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்;

'தளபதி 62' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணையும் நாயகி

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' திரைப்படத்தின் போட்டோசெஷன் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி கட்சிக்கு 24 மணி நேரத்தில் 50 லட்சம் ரிஜிஸ்ட்ரேசன் சாத்தியமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதோடு அதற்கு மறுநாள் இணையதளம் மற்றும் செயலி ஆரம்பித்து அதில் மன்ற உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்

டிரம்ப் தரும் பத்திரிகையாளர் விருது நம்மூருக்கு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர்களில் கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முற்றிலும் வேறுபட்டவராக உள்ளார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வருகிறது