ஆயுதபூஜை ரேசில் இணைந்த விஜய்சேதுபதி படம்

  • IndiaGlitz, [Wednesday,August 17 2016]

வரும் ஆயுதபூஜை விடுமுறை தினமான அக்டோபர் 7ஆம் தேதி சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' உள்பட ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த ரேசில் தற்போது விஜய்சேதுபதி நடித்த 'ரெக்க' படமும் இணைந்துள்ளது.
'ரெக்க' படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான சிவபாலன் பிக்சர்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சிவபாலன் பிக்சர்ஸ் சமூக இணையதளமும் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சுமார் இரண்டு மாத காலத்திற்குள்ளேயே இன்னொரு விஜய்சேதுபதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெக்க' படத்தில் விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், கபீர்சிங், ஹரிஷ் உத்தமன், சதீஷ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை காமன்மேன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

தனுஷின் கண்களில் கண்ணீரை வரவழைத்த திரைப்படம்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவது மட்டுமின்றி...

ஸ்ருதிஹாசன் - கெளதமி இடையே என்னதான் நடக்கின்றது. ஒரு நீண்ட விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும் கெளதமி...

நேதாஜி வாழ்க்கையை ஜனரஞ்சமாக படமாக்க விரும்பும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கமல், ரஜினி படங்கள் உள்பட பல கமர்ஷியல் படங்களை எடுத்துள்ள நிலையில் இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்டி வீரர் நேதாஜி

கார்த்தியின் 'காஷ்மோரா' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'பாகுபலி'யின் எந்தெந்த சாதனைகளை 'கபாலி' தகர்த்தது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலக அளவில் தென்னிந்திய திரையுலகிற்கு பேரும் புகழும் வாங்கித்தந்த திரைப்படம் என்று கூறுவது மிகையாகாது...