விஜய்சேதுபதி பட ஹீரோயின் இன்ஸ்டாகிராம் முடக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Monday,February 21 2022]

விஜய் சேதுபதியுடன் 8 திரைப்படங்களில் நடித்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ‘ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதகாதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ ’மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் ஹேக்செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில இணைப்புகள் அவரது கணக்கிலிருந்து அனுப்பப்பட்டு வருவதாகவும் அந்த இணைப்புகளை யாரும் கிளிக் செய்யவேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே தமிழ் சினிமா பிரபலங்களான பார்த்திபன், குஷ்பூ, அமிர்தா ஐயர் உள்பட ஒருசிலரது சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த பட்டியலில் காயத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புனித் ராஜ்குமார் குடும்பத்தில் மீண்டும் ஒரு மாரடைப்பு மரணம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

 பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததால்அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர்

ஆர்கே செல்வமணி படம் இயக்கினார் என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது: பாக்யராஜ்

இயக்குனர் ஆர் கே செல்வமணி பல வெற்றிப்படங்களை இயக்கியதாக கூறுகிறார்கள், ஆனால் அந்த படங்களை எல்லாம் அவர் தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என இயக்குனர்

சமந்தாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பிரபல நடிகை சமந்தா நடித்து வரும் படத்தின் அட்டகாசமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

மனைவி பிரியாவுடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் அட்லி!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

நீங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை… நடிகை சமந்தா கூறிய ஸ்பெஷல் நபர் யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமீபகாலகமாக சமூகவலைத் தளங்களில்