3 விஜய்சேதுபதி படங்களை இயக்கியவரின் அடுத்த படத்தின் ஹீரோ-ஹீரோயின் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,April 05 2022]

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்களை அடுத்தடுத்த இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ மற்றும் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார். இவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்து வருவதாகவும் நாயகியாக பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிமிஷா சஜயன், பகத் பாசில் நடித்த ’மாலிக்’ மற்றும் ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ உள்பட பல பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பதும், தற்போது அவர் தமிழுக்கு அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய எஸ்.எஸ்.ராஜமெளலி: வைரல் வீடியோ

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் 10 நாட்களில் ஆயிரம்

மாஸ் லுக்கில் சூர்யா: 'சூர்யா 41' படத்தின் வைரல் வீடியோ

நடிகர் சூர்யாவின் 41வது திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் கன்னியாகுமரி அருகே இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பாறையில் ஏறி செல்பி எடுத்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

திருமணமாகி சில நாட்களே ஆன புதுமண தம்பதிகள் பாறை மீது ஏறி செல்ஃபி எடுத்த போது ஏற்பட்ட விபரீதத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'தீனா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் அதன்பின்னர் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், சூர்யா,  உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை

அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா?

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி