விஜய்யிடம் விஜய்சேதுபதி அம்மா கேட்ட ஒரே ஒரு கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா அவரிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி தற்போது வைரலாகி வருகிறது

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விஜய்யை பார்க்க வேண்டும் என்ற தனது அம்மா ஆசைப்பட்டதை அடுத்து அவரை ’மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு அழைத்து வந்தார் விஜய்சேதுபதி

அப்போது விஜய்யை சந்தித்த விஜய் சேதுபதியின் அம்மா மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் அவரிடம் தனது மகன் ஒழுங்காக நடிக்கிறாரா? ஒழுங்காக வேலை செய்கிறாரா? என்று கேட்டதாகவும் தெரிகிறது

இதற்கு தளபதி விஜய், விஜய்சேதுபதி குறித்து பெருமையாக அவருடைய அம்மாவிடம் கூறி இருக்கிறார் அதைக் கேட்டு மிகவும் சந்தோசமடைந்த விஜய் சேதுபதியின் அம்மா அவரை ஆசிர்வதித்து உள்ளார். மேலும் விஜய்யுடன் இணைந்து அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அம்மாவின் ஆசையை நிறைவேறிய விஜய்க்கு, விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன