எதிர்ல வர்றது எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது: 'மாஸ்டர்' விஜய்சேதுபதியின் மாஸ் வசனம்

  • IndiaGlitz, [Saturday,January 09 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பாளரின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இதுவரை விஜய்யின் மாஸ் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய புரோமோ வீடியோக்கள் வெளியான நிலையில் இன்றைய ஐந்தாம் நாள் புரோமோ வீடியோவில் விஜய் சேதுபதியின் மாஸ் வசனம் கொண்ட காட்சிகள் உள்ளன.

‘உலகத்தில யாரை பார்த்து வேண்டுமானாலும் பயப்படலாம், ஆனால் சாவு நெருங்கி விட்டது என்றால் எதிர்க்க இருக்கிறவன் எமனாக இருந்தாலும் பயப்பட கூடாது’ என்ற விஜய்சேதுபதியின் வசனத்துடன் கூடிய மாஸ் காட்சிகள் உள்ளன.

முதன்முறையாக விஜய் சேதுபதியின் மாஸ் வசனத்துடன் கூடிய காட்சிகள் ‘மாஸ்டர்’ புரமோவில் வெளிவந்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.