close
Choose your channels

விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம்

Thursday, December 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடித்துவிட்ட விஜய்சேதுபதி தற்போது அண்டை மாநில மொழிகளின் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி' என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள திரையுலகிலும் அவர் காலடி வைத்து தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெறுகிறார்.

ஆம் விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை சனில் கலாதில் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டு 'உத்தாரா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் டைட்டில் உள்பட பிற விபரங்கள் இன்று வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment