கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதி பட டைட்டில் இதுதான்!!

  • IndiaGlitz, [Wednesday,October 19 2016]

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.ஆனந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது சமுக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கவண்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய புத்தம் புதிய போஸ்டரும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 18வது படம் 'கவண்' என்பது குறிப்பிடத்தக்கது.
'கவண்' படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.