விஜய்சேதுபதியின் 'கவண்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

இந்த வாரம் வெள்ளியன்று வெளியாகும் இரண்டு முக்கிய படங்கள் நயன்தாராவின் 'டோரா' மற்றும் விஜய்சேதுபதியின் 'கவண்'. இரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 'கவண்' திரைப்படம் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் மற்றும் கே.வி.ஆனந்த் என மும்மூர்த்திகள் இணைந்த படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

'கவண்' திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 160 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுகிறது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.