ஓப்பனிங் வசூலில் குறி தவறாத 'கவண்'

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் ஒப்பனிங் வசூலை குறிதவறாமல் அடித்துள்ளது.

இந்த படம் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 266 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,13,44,320 வசூல் செய்துள்ளது மேலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட்டை கொடுத்துள்ளதால் இந்த வருடத்தின் வெற்றி படங்களின் பட்டியலில் 'கவண்' திரைப்படமும் இணையும் என்பது ஓப்பனிங் வசூலில் இருந்து உறுதியாகியுள்ளது.