விஜய்சேதுபதியின் 'கவண்' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'கவண்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் தற்போது அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியையும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இன்றைய நாளிதழ்களிலும் சமூக இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் மார்ச் இறுதியில் வெளியாகும் என்று நமது இணையதளத்தில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

விஸ்வரூபம்' விஷயத்தில் நன்றி மறந்துவிட்டார் கமல். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் ஆவேசமாக கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை எரிச்சல் அடைய செய்துள்ளன. பெருவாரியான பொதுமக்களின் எண்ணங்களையே அவர் பிரதிபலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மீது பதில் தாக்குதல், போலீஸ் புகார் உட்பட அரசியல்வாதிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித

ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரிய

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே