மீண்டும் இளமைக்கு திரும்பிய விஜய்சேதுபதி: வைரலாகும் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்தவித திரையுலக பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே படிப்படியாக முன்னேறி தற்போது மாஸ் நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி விடும் தன்மையுடைய விஜய்சேதுபதி, இமேஜ் பார்க்காமல் வயதான கேரக்டரிலும் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் களம் புகுந்துள்.ளார். பாலிவுட்டில் ஹீரோவாக அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு ’மேரி கிறிஸ்மஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா கைப் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி மூன்று வித கெட்டப்புகளில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். விதமான உடைகளில் இளைஞர் போன்றும், நடுத்தர வயது மற்றும் வயதான தோற்றத்தில் உள்ள இந்த மூன்று போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டோஷூட் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியை 10 வருடங்களுக்கு முன் பார்த்த இளைஞர் போல் பார்ப்பதில் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் டுவிட் செய்துள்ளனர்.


 

More News

பிட்சில் விவசாயம் பண்றீங்களா? அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் அகமதாபாத் மோதேரா மைதானம் தற்போது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின் அவர்களை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள்

ஐசிசி தரவரிசையில் ஹிட்மேனின் புது சாதனை… தொடர்ந்து அசால்ட் காட்டும் அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருக்கிறது.

புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழ்: குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 'குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

நாளை லாஸ்லியாவின் முதல் பட டீசர்: தயாராகி வரும் ஆர்மிகள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படம் 'ஃபிரண்ட்ஷிப்' என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து