விஜய்சேதுபதியின் லேட்டஸ் வீடியோ: லாக்டவுனில் என்ன செய்கிறார் பாருங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் பிஸியாக இருக்கும் நடிகர் நடிகைகள் முதல் அனைத்து நடிகர்களும் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத காரணத்தினால் பல நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளனர் என்பதும், ஒருசிலர் வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் ஒரே நேரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவர் நடித்து முடித்துள்ள சுமார் அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிசியான நடிகரான விஜய் சேதுபதியின் லாக்டவுன் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மாமரத்திலிருந்து மாங்காய்களை பறித்து அவர் தூக்கி எறிவது போன்றும், அந்த மாங்காய்களை ஒருவர் பிடித்துக் கொள்வது போன்று காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் விஜய்சேதுபதியையே லாக்டவுன் மாங்காய் பறிக்க வைக்குமளவுக்கு நிறுத்திவிட்டது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.