ஆயுதபூஜை ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி படம்

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'ரெமோ' படமும், ஜீவா, காஜல் அகர்வாலின் 'கவலை வேண்டாம்' படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரேஸில் தற்போது விஜய்சேதுபதி படமும் கலந்து கொண்டுள்ளது.
விஜய்சேதுபதி நடித்த 'ரெக்க' திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதே அக்டோபர் 7ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன் ஜோடி சேருவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் 'வேதாளம்' வில்லன் கபீர்சிங், ஹரீஷ் உத்தமன், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'தர்மதுரை' ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்?

கடந்த 1ஆம் தேதி வெளியான சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் 'கத்தி'யை தயாரிக்கின்றது லைகா நிறுவனம்

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் முதன்முதலாக இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்தது.

'கபாலி' வழக்கில் திரையுலகினர்களுக்கு நீதிபதி கூறிய அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...

'கவலை வேண்டாம்' படக்குழுவினர்களின் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'போக்கிரி ராஜா' எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது நம்பியிருப்பது 'கவலை வேண்டாம்'

கபாலி'யில் கலக்கும் பவர்புல் பெண்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் காய்ச்சல் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படம் ரஜினியை மட்டுமே குறிவைத்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது...