கமல், சிவகார்த்திகேயனை அடுத்து முதன்முதலாக ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி 

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

கோலிவுட் திரையுலகில் இதுவரை பெண் வேடத்தில் நடிக்காத நாயகர்களே இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் பெண் வேடம் போட்டாலும், பெண் வேடம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவ்வை சண்முகி கமல்ஹாசனும், ரெமோ சிவகார்த்திகேயனும்தான். 

காமெடிக்காக இல்லாமல் கதைக்காக சீரியஸாக பெண் வேடம் போட்டதால் இந்த இரண்டு கேரக்டர்களும் மனதில் நிற்கின்றன. பெண் வேடத்தில் ஒரு பெரிய ரிஸ்க் உள்ளது. மேக்கப்பிலோ மேனரிசத்திலோ கொஞ்சம் தவறினாலும் அது காமெடியாகிவிடும்

இந்த நிலையில் கமல், சிவகார்த்திகேயனை அடுத்து இந்த ரிஸ்க்கை எடுத்திருப்பவர் விஜய்சேதுபதி. 'ஆரண்யகாண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஷில்பா என்ற பெண் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிப்பதாக தெரியவந்துள்ளது.

சேலை, ஜாக்கெட், கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் பெண் வேடத்தில் உள்ள விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதியின் பெண் வேட பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.

ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்

ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும்.

சசிகலாவை நீக்கும் விவகாரம்: அமைச்சர்கள் மிரட்டலால் திடீரென பின்வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக பொதுகுழு இன்று காலை கூடிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது

தங்கையை இழந்த மனவலி எனக்கும் தெரியும்: அனிதா அண்ணனிடம் விஜய்

தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார் என்பதும், அவர் சிறுவயதில் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார் என்பதும் தெரிந்ததே

'100% காதல்' படத்தின் நாயகி திடீர் மாற்றமா?

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 100% காதல்'. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 100% லவ்' என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.