விஜய்சேதுபதி-காத்ரீனா கைப் படத்தின் புதிய அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்’. இந்த படத்தை ஸ்ரீராம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே ’அந்தாதூன்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த படக்குழுவினர் இந்த படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்றும் இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது தொழில் பணிகள் இன்னும் முடியாததால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு இன்று 'மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் டுவிட்டரில் வெளீயாகியுள்ள இந்த போஸ்டரில் 2023 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் தமிழ் இந்தி மொழிகளில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#MerryChristmas coming soon.#SriramRaghavan #KatrinaKaif @tipsofficial @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani @ipritamofficial #MatchboxPictures
— VijaySethupathi (@VijaySethuOffl) December 24, 2022
Music on #Tips pic.twitter.com/bDPURdIdHa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com