தவெக மாநில மாநாடு: விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,October 27 2024]

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய்யுடன் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் விஜய்யின் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் #TVK_maanadu

அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில், விஜய் அவர்களின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில், விஜய் அண்ணாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள். உங்கள் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற எங்களது வாழ்த்துக்கள். உங்களது பேச்சைக் கேட்கவும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையை அறியவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

‘ஆடை’ இயக்குனர் ரத்னகுமார், ‘வாழ்த்துக்கள் விஜய் சார். உங்கள் கட்சி தொண்டர்களும், உங்கள் ரசிகர்களும் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்’

இதேபோல் மேலும் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் காணொளி.. விஜய்க்கு வாழ்த்து..  'கங்குவா' இசை வெளியீட்டு துளிகள்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய காணொளி திரையிடப்பட்டது.

விஜய் அறிவுரையை மதிக்காத தொண்டர்கள்.. விபத்தில் ஒருவர் பரிதாப பலி..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்

என்னால் சரிவர நினைவுகூர கூட முடியவில்லை.. ரஜினி பாராட்டு குறித்து பிரபல இயக்குனர்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில் அவருடைய பாராட்டை என்னால் படம் பிடிக்க முடியவில்லை,

ஜெயிப்பதெல்லாம் ஒரு விஷயமா? விளையாட்டு சுவாரஸ்யமா இருக்கணும்: வறுத்தெடுத்த விஜய்சேதுபதி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அடுத்த புரோமோவில் விஜய் சேதுபதி ஆண்கள் டீமை வறுத்தெடுக்கும் காட்சிகள் இருப்பதால்,

இந்திய ராணுவ வீரர்களுக்காக ஸ்பெஷல் காட்சி.. கண்கலங்க வைத்த 'அமரன்'..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது