சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி-காஜல் அகர்வால்?

  • IndiaGlitz, [Sunday,August 18 2019]

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'Awe'. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் விஜய்சேதுபதி, காஜல் அகர்வால் முதல்முறையாக ஜோடியாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும், முதல் பாகத்தில் ஒரே நேரத்தில் பல கதைகள் நகர்ந்த நிலையில் இந்த படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே கதை மட்டுமே இருக்கும் என்றும் இயக்குனர் பிரசாந்த் வர்மா தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா, கமல்ஹாசனிடம் பேசும்போது கூட

போட்டியே இல்லாமல் வெளியாகின்றதா தளபதியின் 'பிகில்?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

மதுமிதாவின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன? வெளிவராத தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா இன்று திடீரென வெளியேற்றப்பட்டதும்

மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பை பொதுவாக ஞாயிறு அன்றுதான் கமல் அறிவிப்பார். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக இன்றே போட்டியாளர்களில்

கார்த்தியின் 'கைதி' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.