காதலர் தினத்தில் வெளிவரும் விஜய்சேதுபதியின் காதல் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த 'சூது கவ்வும்' படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமியின் இரண்டாவது படமான 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
'நானும் ரெளடிதான்' படத்தை போலவே இந்த படத்திலும் விஜய்சேதுபதி காமெடி ரெளடியாக நடித்துள்ளதாகவும், ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிபவராக நடித்துள்ள 'பிரேமம்' புகழ் மடோனா செபாஸ்டியனை அவர் விழுந்து விழுந்து காதலிக்கும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் வரும் 'காதலர் தினமான' பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. காதல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் 'காதலர் தினத்தில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments