'மாஸ்டருக்கு' பின் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Thursday,January 16 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சுமார் ஒன்பது படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும், அந்த 9 படங்களின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த ஆண்டு மட்டும் அவருக்கு சுமார் 10 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க உள்ள ஒரு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ’சயிர நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த விஜய் சேதுபதி தற்போது இந்த படத்திலும் நடிக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.
 

More News

'எதிரிகளுக்கு எச்சரிக்கை': மாஸ்டர் செகண்ட்லுக்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'மாஸ்டர்' படத்தின் பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில்

விஜய்சேதுபதி படத்தின் மாஸ் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது

பத்திரிகையாளர்களுக்காக ரஜினிகாந்த் கூறிய பால்காரர் கதை:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒரு பால்காரர் கதையை கூறினார். அந்த கதை பின்வருமாறு