விஜய்யின் 'லியோ'வில் விஜய்சேதுபதி? ஹிண்ட் கொடுத்த படக்குழு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படம் ஒரு லோகேஷின் LCU படம் என்றும் இந்த படத்தில் லோகேஷ் கதாகராஜின் முந்தைய படங்களின் கேரக்டர்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக 'கைதி’ படத்தில் இடம்பெற்ற டெல்லி கேரக்டர், ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் ஆகிய கேரக்டர்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ’லியோ’ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான இயக்குனர் ரத்தினகுமார் தனது கையில் கூலிங் கிளாஸின் ஒரு பகுதியை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவரது கையில் இருக்கும் உடைந்த கண்ணாடி ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டர் அணிந்த கண்ணாடியின் ஒரு பகுதி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டர் ’லியோ’ படத்தில் இடம்பெறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மட்டும் உண்மையாக இருந்தால் ’லியோ’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த வடத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் நிலையில் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Never say die 👊#Leo#Kashmir#ShootingDiaries pic.twitter.com/91lnvpTR0Q
— Rathna kumar (@MrRathna) February 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com