'தளபதி 64' படப்பிடிப்பில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜய்சேதுபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் தற்போது விஜய் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் லண்டன் சென்று இருந்தாலும் அவர் இல்லாத காட்சிகள் தொடர்ச்சியாக ஷிமோகாவில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி ’தளபதி 64’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று அவர் ஷிமோகாவிற்கு படப்பிடிப்பிற்காக வந்த போது விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஒரு ரசிகர் தனது பிறந்த நாள் என்று கூறியதும் அவருக்கு கேக் ஊட்டி மகிழ்வித்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் படப்பிடிப்புக்கு வந்த போது எவ்வாறு ரசிகர்கள் அவரை வரவேற்றார்களோ, அதற்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor #VijaySethupathi joined #Thalapathy64 shooting in Shimoga & his initial set of scenes were shot in that schedule. @Thalapathy64Off
— #Thalapathy64 (@Thalapathy64Off) December 26, 2019
Video of @VijaySethuOffl celebrating a fan's bday from Shimoga,Karnataka. #Vijay64 pic.twitter.com/A1HHYUiJnH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments