பொங்கல் ரிலீஸில் இணைந்த விஜய் சேதுபதி படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ஏற்கனவே பிரபலங்களின் படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த படமும் பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’, தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்' சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இது குறித்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி, காத்ரினா கைப், ராதிகா, சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், இந்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
KATRINA KAIF - VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ TO NOW ARRIVE ON 12 JAN 2024... 12 Jan 2024 is the new release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time… #NewPosters…
— taran adarsh (@taran_adarsh) November 16, 2023
“We have made this film with a lot of love and passion,… pic.twitter.com/LTOdtORsFK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout