பொங்கல் ரிலீஸில் இணைந்த விஜய் சேதுபதி படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,November 16 2023]

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ஏற்கனவே பிரபலங்களின் படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த படமும் பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’, தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்' சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இது குறித்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, காத்ரினா கைப், ராதிகா, சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், இந்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

More News

சித்தார்த்தின் 'சித்தா' உட்பட எத்தனை படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஓடிடியில் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விக்ரமை மீண்டும் மீண்டும் கலாய்க்கும் பிக்பாஸ் குழு..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் சென்ற பின்னர்  போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் வாக்குவாதங்களும் சண்டைகளும்

சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் சிக்கிய விஷ்ணு விஷால்.. என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

 சூப்பர் ஸ்டார் பட்டம் கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது என்றும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமானவர் விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

யாரும் கனவில் கூட நினைக்கவில்லை: விராட் கோஹ்லி சாதனை குறித்து பிரபல இயக்குனர்..!

சச்சின் டெண்டுல்கர் சாதனை முறியடிக்கப்படும் என யாரும் கனவில் கூட நினைக்கவில்லை என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் 2 பிரபலங்கள்.. பான் - இந்திய திரைப்படமாக மாறுகிறதா?

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.