அஜித் படத்தில் இவரா வில்லன்?

  • IndiaGlitz, [Saturday,May 14 2016]

அஜித்தின் 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த கபீர்சிங் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்தின் வில்லன் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதியே வில்லனாக நடிக்கவுள்ளதாக ஆச்சரியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் வில்லன் கேரக்டர் 'என்னை அறிந்தால்' விக்டர் கேரக்டர் போன்று மிகவும் அழுத்தமான கேரக்டர் என்றும் இந்த கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த இயக்குனர் சிவா, விஜய்சேதுபதியை அணுகியதாகவும், தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் விஜய்சேதுபதியும் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் நாயகி தேர்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது வில்லனும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.