'விடுதலை' படத்தின் கதாநாயகன் விஜய்சேதுபதி: வெற்றிமாறன் பேட்டியால் சூரி ரசிகர்கள் அதிர்ச்சி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகிவரும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த வீடியோ ஒன்றை நடிகர் சூரி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, ராஜீவ்மேனன் உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று பிரபல ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அதில் காடு என்றால் நமக்கு ஒரு புரிதல் இருக்கும், ஆனால் காடு நமக்கு வேறு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று வெற்றிமாறன் பேசும் காட்சியும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது மழை பெய்யும் காட்சியும் உள்ளன.

மேலும் இந்த வீடியோவில் இயக்குனர் வெற்றிமாறன், ‘இந்த படத்தின் கதை நாயகன் சூரி என்றும் இந்த படத்தின் கதாநாயகன் வாத்தியார் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி சூரி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.