விஜய்சேதுபதியை வானளவு புகழ்ந்த ரஜினிகாந்த்: 'பேட்ட' ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், கலாநிதி மாறன், அனிருத், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது, 'விஜய் சேதுபதி சாதாரணமான நடிகர் இல்லை. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசாக யோசிக்கும் நடிகர். இதற்கு முன் என்ன செய்தோம், இனிமேல் என்ன செய்தால் புதுமையாக இருக்கும் என யோசிக்கும் ஒரு நடிகர்.

விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவருடன் பழகும்போது தான் இது எனக்கு தெரிந்தது. அவரின் பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு. புத்தகம் படிக்காமல், நிறைய படங்கள் பார்க்காமல் இந்த அளவுக்கு அவர் யோசிப்பது ஆச்சரியம். அவர் எல்லாத்தையுமே ரிவர்ஸா யோசிச்சுப் பாப்பேன் என்று கூறினார். அவர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. அவருக்கு என் வாழ்த்துக்கள்' என்று ரஜினிகாந்த் பேசினார்.