விஜய்சேதுபதியை கடவுளாக பார்க்கின்றேன்: பிரபல இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் கோலிவுட் திரையுலகில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'ஜூங்கா', 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம், '96' மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்கள் வெளிவந்தன.
மேலும் விஜய்சேதுபதி ஒரு சிறந்த நடிகர் என்பதைவிட மிகச்சிறந்த மனிதநேயம் உள்ள மனிதர் என்ற பெயரை அனைவரிடமும் பெற்றுள்ளார். குறிப்பாக ரசிகர்களை மதிக்க தெரிந்த கலைஞர்களுள் ஒருவர்
இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் 'வேகம்' திரைப்படம், கே.பாலசந்தரின் 'சஹானா' தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றின் இசையமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களிடம் வீணை இசைக்கலைஞராக பணிபுரிந்தவருமான ராஜேஷ் வைத்யா தனது சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதி குறித்து கூறியபோது, 'என்ன ஒரு எளிமையான மனிதர்! அவரை நான் கடவுளாகவே பார்க்கின்றேன். மிகச்சிறந்த மனிதநேயம் மிக்கவர்' என்று கூறியுள்ளார்.
With the one and only @VijaySethuOffl what a humble person... My God... Great human being...???? @VJSethupathi @vijaysethu_offl @VijaySethu_FC @VijaySethuFans pic.twitter.com/65Gy59ldyQ
— Rajhesh Vaidhya (@RajheshVaidhya) January 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments