விஜய்சேதுபதி படத்தின் மாஸ் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • IndiaGlitz, [Wednesday,January 15 2020]

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த செகண்ட்லுக் போஸ்டரில் விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் மாஸ் ஆக இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இன்னொரு படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப பல நாடுகள், நகரங்களுக்கு சுற்றும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருப்பார் என்பது இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வருகிறது. நாளை பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் விஜய்சேதுபதிக்கு இந்த படத்தின் குழுவினர் வழங்கியுள்ள பக்கா பிறந்த நாள் பரிசாக இந்த போஸ்டர் உள்ளது.

வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகாஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பத்திரிகையாளர்களுக்காக ரஜினிகாந்த் கூறிய பால்காரர் கதை:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒரு பால்காரர் கதையை கூறினார். அந்த கதை பின்வருமாறு

துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று டிக் டாக் வீடியோ எடுக்க முயன்ற 18 வயது வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

விவாகரத்து ஆன மனைவி தனது நண்பருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த கணவர், அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அசுரன்'-'பட்டாஸ்' படங்களின் ரன்னிங் டைம் ஒற்றுமை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்'திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடைசி நிமிடம்

'மாஸ்டரை' முந்தும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான