விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தகவலை வெளியிட்ட படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Thursday,November 04 2021]

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’, ’அனபெல் சேதுபதி’ மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதி மீது தாக்குதல்: என்ன நடந்தது பெங்களூரு விமான நிலையத்தில்?

நடிகர் விஜய்சேதுபதி நேற்று பெங்களூர் சென்றிருந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவி பிரபலங்களுடன் தீபாவளி கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாட்டம் நடக்கும் காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன.

ஒருநாள் அணியின் கேப்டன் பதவியையும் இழக்கிறாரா விராட் கோலி?

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி

டர்பன் கெட்டப்பில் நடிகை மஞ்சுவாரியர்… கவனம் ஈர்த்த புகைப்படம்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை மஞ்சுவாரியர்.

கவுதம் மேனனுக்கு 'அன்புசெல்வன்' தயாரிப்பாளர் ரிலீஸ் செய்த வீடியோ!

கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் என்பவரது இயக்கத்தில் 'அன்புசெல்வன்' என்ற திரைப்படம் உருவாகி வருவதாக இன்று காலை திரையுலக பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் விளம்பரம் வெளியானது