இந்த நிலம் எதற்காக தோன்றியது? விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 19 என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தின் டிரைலர் சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. டிரைலரில் உள்ள சில வசனங்கள் இதோ:
எனக்கு இந்த உலகம் எதனால் படைக்கப்பட்டது என்று கேள்வி என்னுடைய 3 வயசிலேயே ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன். என் முன்னாடி எல்லாரும் சண்டை போட்டுக்கிட்டாங்க, அப்புறம் வளர்ந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் நிலத்துக்காக தான் எல்லாரும் சண்டை போட்டார்கள் என்று
நிலை எதுக்குன்னு கேட்டேன்? வாழ்றதுக்குன்னு சொன்னாங்க, மனுஷன் வரதுக்கு முன்னாடி இங்க மிருகங்கள் வாழ்ந்துகிட்டு இருந்த இடத்தை அப்புறம் குரங்குல இருந்து வந்த மனுஷன் ஆக்கிரத்து வாழ ஆரம்பித்தான். அவனை பாதுகாக்க ஒரு சட்டம் போட்டான். அந்த சட்டத்தை பாதுகாக்க ஒரு தலைவன் உருவாகினான். அப்புறம் தலைவன் வந்ததுக்கு அப்புறம் அது நாடா மாறுச்சு. நாட்டை பாதுகாக்க மக்களை கொல்ல ஆரம்பிச்சாங்க. நாடு எதனால் வந்தது என்று கேட்டால் மக்களை பாதுகாக்க சொன்னாங்க. எனக்கு இன்னும் அந்த கேள்விக்கு பதில் வரல, இந்த நிலம் எதற்காக படைக்கப்பட்டது?
ஒரு அகதி எப்படி வெளிநாட்டுக்கு போக முடியுமா? அப்படி போக முடியும் என்றால் அவங்க அவங்களுக்கு பிடித்த நாட்டில் சென்று வாழ்வாங்களே? என்ற கேள்வியுடன் இந்த படத்தின் டிரைலர் முடிவடைகிறது. நிலம் வாழத்தான் என்று உணர்த்தும் இந்த படைப்பு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, கனிகா, ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெங்கடகிருஷ்ணா ரோக்நாத் இயக்கியுள்ளார்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com