ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே: விஜய்சேதுபதியின் புதிய முயற்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவரது விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வெப் திரைப்படத்தின் டைட்டில் ’முகிழ்’ என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்
இந்த திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இந்தப் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்திலும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ரெஜினாவும் நடிக்க உள்ளார்கள் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பெண் இசையமைப்பாளர் ரீவா இசையில், சத்யா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரே ஒரு மணி நேரம் ஓடும் வெப் திரைப்படம் ஒரு புதிய முயற்சியாகவே கருதப்படுகிறது
Happy to announce @vsp_productions 's maiden One hour web film titled as #Mughizh #முகிழ்
— VijaySethupathi (@VijaySethuOffl) December 30, 2020
Trailer from 1-1-2021 @ 5 PM.
⭐ing #SreejaVijaysethupathi @ReginaCassandra @VijaySethuOffl
Directed by @karthik_films@DoPsathya @revaamusic @R_Govindaraj @proyuvraaj pic.twitter.com/TAicqCkV49
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com