ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே: விஜய்சேதுபதியின் புதிய முயற்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவரது விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வெப் திரைப்படத்தின் டைட்டில் ’முகிழ்’ என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இந்த திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இந்தப் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்திலும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ரெஜினாவும் நடிக்க உள்ளார்கள் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பெண் இசையமைப்பாளர் ரீவா இசையில், சத்யா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரே ஒரு மணி நேரம் ஓடும் வெப் திரைப்படம் ஒரு புதிய முயற்சியாகவே கருதப்படுகிறது

More News

வலிமை தயாரிப்பாளரின் அதிரடி டிவிட்… ஆனாலும் சோகம் தீராத தல ரசிகர்கள்!!!

தல அஜித் தனது ஹிட் படமான நேர்க்கொண்ட பார்வையைத் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ஆரியை ஐஸ் வைத்த கேபி அம்மா! எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு!

ஆரி மீது கை வைத்தால் அடுத்த வாரம் வெளியேற வேண்டியதுதான் என்பது தற்போது அனைவருக்கும் கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. இதனை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர்களுடைய உறவினர்களும் அட்வைஸ் ஆக கூறி வருகின்றனர்

சிம்புவின் 'ஈஸ்வரன்' ரிலீஸ் தேதி: அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் 'ஈஸ்வரன்', இந்தப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டது

முன்னணி நடிகருக்கு விவசாயிகள் விருது… பாராட்டி மகிழும் ரசிகர்கள்!!!

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

பாஜகவில் இணைந்த மற்றொரு தமிழ் நடிகர்: குஷ்பு இணைந்து போஸ்!

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் இணையும் திரையுலக பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்