close
Choose your channels

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்!

Sunday, August 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் 5 படங்களுக்கு மேல் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’லாபம்’ திரைப்படம் வெளியாகும் அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு விஜய் சேதுபதி, ராஷி கண்ணா நடித்த ’துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகாத விஜய் சேதுபதியின் திரைப்படம் ஒன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன், சத்யராஜ், மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய இரண்டு நாட்கள் அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment