விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் முக்கிய அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று ’துக்ளக் தர்பார்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் ஒளிபரப்பு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இந்த படத்தின் பாடல்கள் வரும் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கோவிந்த் வசந்தா கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் கோவிந்த் வசந்தா சூப்பர் பாடல்களை பதிவு செய்த நிலையில் இந்த படத்திலும் அதே போல் அவருடைய பாடல்கள் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகண்ணா நடித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், காயத்ரி, பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
#TughlaqDurbar Audio From 18th August 6PM ????#TughlagDurbarAudio
— Seven Screen Studio (@7screenstudio) August 16, 2021
A #GovindVasantha Musical ????#MakkalSelvan @VijaySethuOffl @DDeenadayaln @Lalit_SevenScr @RaashiiKhanna_ @rparthiepan @SunTV @NetflixIndia @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/ZlAA9Z1ECw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com