சீனாவில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் மாஸ் திரைப்படம்.. சூப்பர் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெகு அரிதாகவே சீனாவில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது என்பதும் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 110 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி ஓடிடியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த படம் சீனாவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’மகாராஜா’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ள நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் வாங்கி உள்ளதாகவும் அவர் விஜய் சேதுபதியின் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, பிக்பாஸ் சாச்சனா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
Maharaja will be released in China on 29 November by @AlibabaGroup #Maharaja#VJS50@VijaySethuOffl @PassionStudios_ @TheRoute pic.twitter.com/LZawPK9zy3
— Nithilan Saminathan (@Dir_Nithilan) November 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com