சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,March 25 2019]

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.

'சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் முந்தைய படமான 'ஆரண்ய காண்டம்' திரைப்படமும் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 175 நிமிடங்கள் ஆகும். அதாவது சுமார் 3 மணி நேரம் ஓடும் நீளமான படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More News

திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்

அமமுக வேட்பாளரான சிம்பு படத்தயாரிப்பாளர்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: