2ஆம் பாகமாக உருவாகும் விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்

  • IndiaGlitz, [Monday,March 11 2019]

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படம் ஒன்றும் விரைவில் இரண்டாம் பாகமாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய 'சேதுபதி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. விஜய்சேதுபதியின் கம்பீர போலீஸ் தோற்றம் இந்த படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. இந்த நிலையில் 'சேதுபதி 2' திரைப்படம் விரைவில் உருவாகவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது

'சேதுபதி 2' திரைப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த வாசன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், அதேபோல் அருண்குமாரே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வாசன் மூவீஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து வரும் 'சிந்துபாத்' மற்றும் 'மாமனிதன்' ஆகிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: முழுவிபரம்

2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில்  அரோரா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது

வைரமுத்துவை சப்போர்ட் பண்ற அத்தனை கூமுட்டைகளும்....சின்மயியின் சர்ச்சை டுவீட்

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே

சாதி பிரிவினையை அலசும் சூர்யாவின் அடுத்த படம்!

நடிகர் சூர்யா தற்போது 'என்.ஜி.கே' படத்தில் நடித்து முடித்து 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து 'இறுதிச்சுற்று' சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்

சுவாமி ஐயப்பன் வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் - அனுஷ்கா

ஒவ்வொரு வருடமும் ஐயப்பன் சீசனின்போது ஒரு புதிய ஐயப்பன் குறித்த திரைப்படம் வெளியாகி வருகிறது. ஆனால் இம்முறை பிரபலங்கள் இணையும் ஒரு ஐயப்பன் படம் உருவாகவுள்ளது. 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம்

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல்ஹாசன்