25வது படத்தில் துணிச்சலான கேரக்டரை ஏற்று நடிக்கும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Tuesday,January 16 2018]

ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'சீதக்காதி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அவர் சுமார் 80 வயது முதியவர் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது இந்த ஃபர்ஸ்ட்லுக் தோற்றத்தில் இருந்து தெரியவருகிறது. கையில் ஒரு புத்தகத்துடன் ஆழ்ந்த யோசனை விஜய்சேதுபதி ஒரு பழைய மரநாற்காலியில் உட்கார்ந்திருக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் வயதான கேரக்டரை துணிச்சலுடன் ஏற்று நடிக்கும் ஒரே நடிகராகவே விஜய்சேதுபதியை பார்க்க முடிகிறது. மேலும் இந்த படம் விஜய்சேதுபதியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.