தீபாவளிக்கு மும்முனை போட்டி: பிகில், கைதியுடன் இணைந்த மாஸ் படம்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

வரும் தீபாவளித் திருநாளில் விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் அக்டோபர் ரிலீஸ் என்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சரியான ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’திரைப்படம் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் ’பிகில்’, கார்த்தியின் ;கைதி’ மற்றும் விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கும் மும்முனை விருந்தாக கருதப்படுகிறது

விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக் ராகுல் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது