5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து வரும் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஹீரோவாக மட்டுமின்றி நட்புக்காகவும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் நட்புக்காக விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் விஜய்சேதுபதியே தனது சமூக வலைத்தளத்தில் அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு திரையுலகின் ஹீரோ சந்தீப் கிஷான் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தை ரஞ்சித் ஜயகொடி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ’மைக்கேல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் மொழிகளில் உருவாகி வருகிறது.

More News

காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு… உயரும் பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

பிரபல சீரியலில் களமிறங்கும் மூத்த திரைப்பட நடிகை....!

தமிழ் திரைப்படங்களில் 80-கள்  முதல் பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள்  மத்தியில்

நான் குடித்துவிட்டு பிரச்சனை செய்தேனா? உண்மையை உடைத்த தமிழ் நடிகர்!

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சஷிகுமார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நான் குடித்துவிட்டு யாரிடமும் பிரச்சனை செய்யவில்லை என்றும் என்னை பற்றிய தவறான

டிரெண்ட் ஆகும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பது தெரிந்ததே.

10 லட்சம் வீடியோக்களை டெலிட் செய்த யுடியூப் நிறுவனம்....! காரணம் என்ன....?

கொரோனா குறித்த தவறான பதிவுகளை வெளியிட்டிருந்த, 10 லட்சம் யுடியூப் வீடியோக்களை டெலிட் செய்துள்ளது யுடியூப் நிறுவனம்.