பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா விஜய்சேதுபதியின் படம்?

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத் தமிழன்' திரைப்படம் வரும் நவம்பர் இரண்டாம் வாரம் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளிவரும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குணசித்திர நடிகர் பெரிய கருப்புத்தேவர் மகன் விருமாண்டி இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வேலராமமூர்த்தி, பவானிஸ்ரீ, சமுத்திரக்கனி உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்கத்தில் சண்முகம் முத்துசாமியின் வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் 'தர்பார்' உள்பட ஒருசில படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படமும் பொங்கல் ரிலீஸ் படங்களின் பட்டியலில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'வலிமை' நாயகி நஸ்ரியாவா? அவரே அளித்த விளக்கம்!

அஜித் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படமான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது 

'அசுரனை' அடுத்து அடுத்த ஹிட்டுகளுக்கு தயாராகும் தனுஷ்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் தீபாவளி திரைப்படங்களையும் தாண்டி வசூல் மழை பொழிந்து வரும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் '

'இந்தியன் 2' படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளின் தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக

கடன் வாங்கி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் வார இறுதியில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல்

அட்லிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பாலிவுட் பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய பிகில் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி