'அன்பான மகள் வந்ததால் அம்பானி நானாகிறேன்'.. விஜய்சேதுபதிக்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடலை எழுதிய வைரமுத்து, விஜய் சேதுபதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகிய ’மகாராஜா’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் இந்த படத்தின் விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'தாயே தாயே மகளாக வந்தாய்’ என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜனீஷ் லோக்நாத் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில், சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் குறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:
விஜய் சேதுபதி
ஒரு தனிமைத் தந்தை
உறவற்ற வெறுமை
மகளென்ற பந்தத்தால்
நிறைந்து வழிகிறது
முடிதிருத்தும்
தொழிலாளி அவர்
ஆனால், உலகத்தின்
பெரும்பணக்காரர்களுள்
தானும் ஒருவன் என்று
பெருமை பேசுகிறார்
எப்படி?
‘அன்பான மகள்வந்ததால்
அம்பானி நானாகிறேன்’
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில்
அஜனீஷ் லோக்நாத் இசையில்
சித் ஸ்ரீராம் குரலில்
மஹாராஜா படத்தின்
ஒரு தனிப்பாடல் இது
மூன்றுமுறை கேளுங்கள்
முழுச்சாரம் இறங்கும்
விஜய் சேதுபதி
— வைரமுத்து (@Vairamuthu) June 8, 2024
ஒரு தனிமைத் தந்தை
உறவற்ற வெறுமை
மகளென்ற பந்தத்தால்
நிறைந்து வழிகிறது
முடிதிருத்தும்
தொழிலாளி அவர்
ஆனால், உலகத்தின்
பெரும்பணக்காரர்களுள்
தானும் ஒருவன் என்று
பெருமை பேசுகிறார்
எப்படி?
‘அன்பான மகள்வந்ததால்
அம்பானி நானாகிறேன்’
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments