ரொம்ப கேவலமா ட்ரீட் பண்ணாங்க.. 'மகாராஜா' அனுபவம் குறித்து விஜய்சேதுபதி மகள் சஞ்சனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ‘மகாராஜா’ நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்பின்போது உண்மையாகவே என்னை மகள் போல் நினைத்து பழகினார், அவருடைய சாப்பாட்டை எனக்கு கொடுப்பார், என்னுடைய சாப்பாட்டை அவர் எடுத்துக் கொள்வார், படப்பிடிப்பின் போது நாங்கள் உண்மையாகவே அப்பா மகள் போல் பழகினோம்’ என்றும் தெரிவித்தார்.
மேலும் இதற்கு முன்பு நான் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த போது, நானே தான் இந்த படத்தில் நான் நடித்துள்ளேன் என்று சொல்வேன், அப்போது அவர்கள் படம் பார்த்துவிட்டு, ஆமாம் நீங்கள் நடித்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் ‘மகாராஜா’ திரைப்படத்தில் நான் சாலையில் செல்லும் போது என்னை பார்த்து பலர் ’நீங்கள் மகாராஜா படத்தில் நடித்த பொண்ணுதானே, சூப்பராக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன் நான் பணியாற்றிய செட்டுகளில் சாப்பாடு விஷயத்தில் ரொம்ப மோசமாக ட்ரீட் செய்வார்கள், சாப்பிட எங்கு போனாலும் இங்கு இல்லை வேறு எங்கேயும் போய் சாப்பிடு என்று விரட்டி விடுவார்கள், ஆனால் மகாராஜா டீம் அப்படி இல்லை’ என்றும் தெரிவித்தார்.
மேலும் சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், சினிமா மட்டும் இல்லை, எந்த வேலைக்கு சென்றாலும், நீ ஒழுங்காக இரு, சரியான பாதையில் போ, நீ சரியாக நடந்து கொண்டால், உன்னிடம் எல்லோரும் சரியாக நடந்து கொள்வார்கள்’ என்று தெரிவித்தார்.
நடிகை சஞ்சனா பேட்டியின் முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com