அக்டோபரில் விஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீஸ்?

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடும் போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு முன்கூட்டியே இந்த படம் வெளிவரவும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது

இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகியிருக்கும் விஜய்சேதுபதியின் படம் 'மாமனிதன்'. சீனுராமசாமி இயக்கிய இந்த படத்தையும் வரும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ள இந்த படத்தில் லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவும் அவருடைய இசை வாரிசுகளான யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது