'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை' இசைஞானியின் குரலில் 'மாமனிதன்' பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டரில் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
’தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை’ என்று தொடங்கும் பா விஜய் எழுதிய இந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார் என்பதும் அவரது குரலில் இந்த பாடலை கேட்க வழக்கம் போல் இனிமையாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்த்ல் ‘ஜோக்கர்’ புகழ் குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here we go!#MaaManithan First Single!
— Raja yuvan (@thisisysr) April 7, 2021
Thattiputta -out now!https://t.co/rKVkTjRhzE@VijaySethuOffl @seenuramasamy @U1Records @SGayathrie @mynnasukumar@YSRfilms @donechannel1 @divomovies @CtcMediaboy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com