'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: ஆனால் இம்முறை ரசிகர்களுக்கு சந்தோஷம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ திரைப்படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ், ஜூன் 24ஆம் தேதி ’மாமனிதன்’ படம் வெளியாகும் என அறிவித்தார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஜூன் 23 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒரு நாள் முன்னதாகவே ’மாமனிதன்’ படத்தை பார்க்க இருப்பதையடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்தில் ‘ஜோக்கர்’ புகழ் குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
Makkal Selvan @VijaySethuOffl 's #Maamanithan to have a grand release on June 23rd #MaamanithanFromJune23
— Raja yuvan (@thisisysr) May 20, 2022
A @studio9_suresh Release @seenuramasamy @SGayathrie @mynnasukumar @sreekar_prasad @U1Records @RapsPrasaath @Kumar12Mohinesh @ParthibanSunraj @onlynikil @CtcMediaboy pic.twitter.com/XprZZRRnD2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com