விஜய்சேதுபதி படத்தின் அப்டேட்டை கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் அப்டேட்டை சற்று முன்னர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி ஒருசில வருடங்கள் ஆன நிலையில் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீசாக போவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை 11:30 மணிக்கு வெளியாகும் என யுவன்சங்கர்ராஜா சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ’ஏ ராசா’ என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை’ என்று தொடங்கும் பா விஜய் எழுதிய பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடி இருந்தார் என்பதும் தெரிந்ததே. விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Second single from Maamanithan Releasing Tomorrow [ Friday 28 ] at 11.30 A.M. #YeRasa pic.twitter.com/CsDp8CyqJU
— Raja yuvan (@thisisysr) May 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments